60 ஆண்டு கால இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு அவசியம் என்கிறார் ஜனாதிபதி

60 ஆண்டுகால இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வு அவசியம். எனினும் இந்த நாட்டில் புரையோடிக்கிடக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான எல்லோராலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை உடனடியாக ஏற்படுத்துவது சாத்தியமற்ற செயல் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை அலரி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களையும், இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார்.

இச்சந்தர்ப்பத்தில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் படி மக்கள் உங்களுக்கு இன்னுமொரு மகத்தான ஆணையை கொடுத்துள்ளார்கள். எனவே, நீங்கள் நாட்டின் இனப்பிரச்சினைக்கு உடனடித்தீர்வை ஏற்படுத்துவதை ஏன் காலதாமதப்படுத்துகிஅர்கள்” என்ற கேள்வியையே பத்திரிகை ஆசிரியர் ஜனாதிபதியிடம் கேட்டார்.

இந்த கேள்வி தொடர்பாக மேலும் கூறிய ஜனாதிபதி அவர்கள்; இனப்பிரச்சினைக்கான தீர்வை நாட்டிலுள்ள சகல தரப்பினரின் உடன்பாட்டுடன் ஏற்படுத்தினால் தான் அது நிரந்தரத் தீர்வாக அமைய முடியும். எனவே, எல்லோருடைய கருத்துக்கள், அபிப்பிராயங் களை கேட்டறியும் செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறினார்.

இதனைச் செய்வதற்காக நான் சகல பிரிவினரையும் தனித்தனியாக அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழுவினரை நான் விரைவில் சந்திக்கவிருக்கிறேன். அவர்கள் தீர்விற்கான தங்கள் யோசனைகளை இதுவரையில் முன் வைக்கவில்லை. பின்னர் அதனடிப்படையில் நாம் சுமுகமான பேச்சுவார்த்தைகளை நடத்து வோம் என்றும் ஜனாதிபதி கூறினார். யுத்த காலத்தின் போது காணாமல் போனவர்களின் விபரங்களை அரசாங்கம் இதுவரை முழுமையாக வெளியிட வில்லையென்று ஒரு பத்திரிகையாளர் ஜனாதிபதியிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அத்தகவல்களை அரசாங்கம் இப்போது திரட்டிக் கொண்டி ருக்கிறதென்றும், எல்.ரி.ரி.ஈ. அக்கிரமங் களினால் உயிர்துறந்த அல்லது காணாமல் போனவர்களைப் பற்றி ஏன் எவரும் கேள்வி கேட்க தயங்குகிறார்கள் என்றும் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

இனப்பிரச்சினை தொடர்பான சமரச பேச்சுவார்த்தைகள் பற்றி இன்னுமொரு கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எல்.ரி.ரி.ஈக்கு ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ பெருமளவு உதவிகளையும், பென்ஸ் கார் போன்ற வசதிகளையும் பெற்றுக் கொடுத்தார். அதனால் அவர்கள் வெளிநாடுகளில் நடத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளு க்கு ஆடம்பரமான முறையில் சென்று கலந்து கொண்ட போதும் தானும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் வாடகை வண்டியில் கூட செல்லாமல் நடந்தே சென்றதாகவும் புன்முறுவலுடன் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply