இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் கிறீஸ் பூதத்துடன் நெருங்கிய தொடர்பு; நாடாளுமன்றத்தில் சுமந்திரன் எம்.பி.
வடக்குகிழக்கில் இடம்பெற்ற கிறீஸ் பூதங்கள் விவகாரத்தில் இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.தேசிய கல்வி நிறுவனங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
வடக்கிலும் கிழக்கிலும் பொலிஸ் அராஜகம் ஒரு வாழ்க்கை முறையாகிவிட்டது. கிறீஸ் பூதங்கள் விவகாரத்திலே பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் ஈடுபாடு உண்டு என்று பரவலாக நம்பும் வடக்கு, கிழக்கு பொதுமக்களின் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் அதிகாரிகளின் வன்முறைப் பிரயோகங்கள் சந்திக்க நேர்ந்தது. பலர் மரித்தனர். இன்றும் பலர் மோசமான காயங்களுக்கு உள்ளாகினர். அந்த அடியுதைகளுள் சில குறிப்பாக நாவாந்துறைச் சம்பவம், அராஜக வெறியாட்டம் மட்டுமல்ல பொது மக்களை சிறுமைப்படுத்தும் விதத்திலே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. அண்மையிலே யாழ்ப்பாணத்தின் நீதிமன்ற வளாகத்திலும் கூட சில நபர்கள் பொலிஸ் அதிகாரிகளாலே அடித்துதைக்கப்பட்டமையை நாம் கண்டிருக்கிறோம். அதைத் தொடர்ந்து யாழ்ப்பாண சட்டத்தரணிகள் அந்த அடியுதையைக் கண்டிப்பதற்கு துணிந்து செயற்பட்டனர்.
மேலும் இன்றைய இலங்கைப் பொலிஸ் பிரிவு சிங்கள ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக உள்ளது என்பதையும் நாம் மறக்கவில்லை . 84000 பேரைக் கொண்டதாக மதிப்பிட்டுள்ள அந்த பிரிவுக்குள் பணியாற்றும் தமிழ் பொலிஸார் ஆக 1,143 மாத்திரமே. இந்த எண்ணிக்கையானது ஐ.நா. பொது மன்றத்திலே ஜனாதிபதி குறிப்பிட்ட பிரகாரம் அண்மைய காலத்திலே இடம்பெற்ற பணிக்கமர்த்தலிலே பணிக்கமர்த்தப்பட்ட 669 பொலிஸாரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது மொத்த பொலிஸ் படைப்பிரிவின் 2 இற்கும் குறைவான வீதமாகும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply