எம்.வீ.சன் சீ கப்பல் மூலம் 500 இலங்கையர்களை கனடாவுக்கு கடத்திய குற்றச்சாட்டின் பிரதான சந்தேக நபர் கைது
எம்.வீ.சன் சீ கப்பல் மூலம் ஏறத்தாள 500 இலங்கையர்களை கனடாவுக்கு கடத்திய குற்றச்சாட்டின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தயாகரன் மார்க்கண்டு என்ற அவர், பிரான்ஷில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக, பிரான்ஸ் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவரை கனடாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட பூர்வ நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அவர் கனேடிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்படுவதுடன், ஒரு மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தயாகரன் மார்க்கண்டு என்பவர் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டார். எனினும் அவர் சட்டவிரோதமான பொருட்களை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, 320 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது செயற்பாடுகளை அவதானித்து வந்த அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய இரகசிய காவற்துறையினர், பிரான்ஸ் காவற்துறைக்கு வழங்கிய ஒத்துழைப்புடன் அவர் பிரான்ஸில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply