ஜெனீவா பிரேரணைக்கு முகம்கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் நிலையான திட்டமில்லை : ஜாதிக ஹெல உறுமய

இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணைக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் நிலையான திட்டமில்லை எனத் தெரிவித்துள்ள அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய, இது தொடர்பில் தாம் ஐந்து அம்சத் திட்டங்கள் அடங்கிய யோசனைகளைத் தயாரித்துள்ளதாகவும், இம்முறை இறுதியில் அதனை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய மேலும் தெரிவித்துள்ளதாவது .

ஜெனீவாவில் அமெரிக்கா எமது நாட்டுக்கு எதிராகப் பிரேரணையை நிறைவேற்றியதோடு அதனை அடிப்படையாக வைத்து இன்று எம் மீது பல அழுத்தங்களை பல்வேறு வழிகளில் பிரயோகித்து வருகின்றது. எமது நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வுகளைத் திணிக்க முயல்கின்றது.

ஆனால் இதற்கு முகம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் நிலையான கொள்கையுடனான திட்டம் எதுவும் இல்லை. எனவே அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான நாம் ஜனநாயகம்,நாட்டின் இறைமை பாதுகாக்கும் நல்லாட்சி, ஒற்றையாட்சியை பாதுகாக்கும் வகையில் யோசனைகளைத் தயாரித்துள்ளோம்.

இதன் மூலம் அமெரிக்காவின் சவாலை வெற்றிக்கொள்ள முடியும். இந்த யோசனைகள் அடங்கிய அறிக்கை இம் மாத இறுதியில் மகாநாயக்க தேரர்களிடம் கையளித்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவிடமும் கையளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply