அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை : த.தே.கூ

அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே  காரணம் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என கட்சி அறிவித்துள்ளது.
 
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளே காரணம் என குற்றம் சுமத்துவது முட்டாள்தனமானது என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் ந்;தாடர்பிலும், நடவடிக்கைகள் தொடர்பிலும் அரசாங்கம் விடயங்களை நன்கு அறியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் காத்திரமான தீர்வுத் திட்டங்களை முன்வைக்கும் வரையில் சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுக்களை தவிர்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து விட்டதனால் சகல விடயங்களுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply