ஆசியாவின் திறமைமிகு தலைவர்; ஜனாதிபதிக்கு அகாஷி புகழாரம்

ஆசியாவின் திறமைமிக்க தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று ஜப்பான் விசேட தூதுவர் யசூசி அகாஷி ஜப்பானில் நடைபெற்ற சந்திப்பில் தம்மிடம் தெரிவித்த பாராட்டுக் கருத்தை ஜனாதிபதியின் இந்து மத விவகார ஆலோசகர் பாபு சர்மாவும் முஸ்லிம் மத விவகார இணைப்பாளர் ஹஸன் மெளலானாவும் இணைந்து நேற்று ஜனாதிபதியிடம் நேரடியாகத் தெரிவித்தனர்.

நேற்று மாலை பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற ஜனாதிபதி செயலகத்தின் புதுவருட கொண்டாட்ட நிகழ்வொன்றில் ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவித்த பின்னர் இருவரும் இணைந்து இதனை ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். அதற்கு ஜனாதிபதி இவர்களுக்குத் தனது மகிழ்வுடன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply