வடமாகாண கல்விக்காக 60 வீத நிதி ஒதுக்கீடு!
வடமாகாணத்தில் அதிகளவிலான நிதி கல்விக்காவே ஒதுக்கப்படுகின்றது என வடமாகாண திரைசேரிப் பணிப்பாளர் கே.ஆர் துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் உள்ள திணைக்களங்களில் 30 திணைக்களங்களுக்கு திறைசேரி ஊடாக நிதி வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
திறைசேரியில் 30 அமைச்சு மற்றும் திணைக்களம் என்பனவற்றிற்கு நிதிவழங்கப்படுகின்றது. அதனடிப்படையில் இலவசம், ஆளணி அதிகரிப்பு, சம்பளம் அதிகரிப்பு என்பனவற்றினை அடிப்படையாகக் கொண்டு கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டிற்கும் வடமாகாணத்தில் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கல்விக்கு 60வீதமும், சுகாதாரத்திற்கு 25 வீதமும் என 85 வீதம் இதனுள் உள்ளடக்கப்படுகின்றது. மிகுதியாக உள்ள 15வீதமே மற்றைய திணைக்களங்களுக்கு வழங்கப்படுகின்றது.
கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டும் அத்தியாவசியமானதும் இலவசமானதும், செயற்பாடுகளின் விரிவாக்கம் என்பனவற்றின் அடிப்படையில் கல்விக்காக மாதம் ஒன்றிற்கு 400 மில்லியன் ரூபாவும் சுகாதாரத்திற்கு 170 மில்லியன் ரூபாவும் வழங்கப்படுகின்றது.
அத்துடன் மேலதிக 15 வீதத்திற்கும் மாதம் ஒன்றிற்கு 100 மில்லியன் ரூபா வழங்கப்படுகின்றது. இதன்படி மாதத்திற்கு அனைத்து திணைக்களுக்கும் 670 மில்லியன் ரூபா வழங்கப்படும்.
இருப்பினும் சில விசேட தேவைகள் உள்ளதாக திணைக்களங்கள் அறிக்கை சமர்ப்பித்தால் மாதம் ஒன்றில் 750 மில்லியன் ரூபாவும் வழங்கப்படும் சந்தர்ப்பம் உண்டு.
திரைசேரியில் அமைச்சு திணைக்களம் உட்பட, கல்வி என்ற அடிப்படையில் 3பிரிவுகளும், சுகாதாரத்திற்குள் 3 பிரிவுகளும், விவசாயத்தில் 5 பிரிவுகளும், உள்ளாராட்சி என்ற அடிப்படையில் 7பிரிவுகளும் கட்டட திணைக்களம் என்பதற்குள் 3பிரிவுகளும், ஆளுநர் அலுவலகத்தினுள் 3 பிரிவுகளும், பிரதம செயலாளர் கொத்தணியில் 5 பிரிவுகளும் என 30 பிரிவுகள் உள்ளடங்குகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply