விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு: கனணியில் ஆவணங்கள் வைத்திருந்தவர் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்பு வைத்திருந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பொலிஸாரினால் இச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு சொந்தமான கணனியில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இந்நபர் வவுனியா பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களையும் விற்பனை செய்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply