ஹெரோயின் கடத்த முற்பட்ட இலங்கைத் தமிழர்கள் கைது
ஹெரோயின் வைத்திருந்த இலங்கையர்கள் இருவரை இந்திய போதை கட்டுப்பாட்டு பணியக அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.
இவரிடமிருந்த 3.5 கிலோக்கிராம் ஹெரோயினையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதன் பெறுமதி 3.5 கோடி ரூபா என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றை தினம் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இலங்கைத் தமிழர்கள் இருவரையும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இருவரையும் கைது செய்தனர்.
இவர்களில் ஒருவரது பெயரே வெளியிடப்பட்டது. பிரசாத் என்பவரும் அவரது நண்பர்களும் இணைந்தே இந்த கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் படகு மூலம் இலங்கைக்கு ஹெரோயினை கடத்துவதற்கு திட்டமிட்டிருந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply