இரவு தொடர்ச்சியான மழை வௌ்ளத்தில் சிக்கி 28 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் தஹர் மாகாண இஷ்கமிஷ் மாவட்டத்தின் மலைப்பகுதியில் நேற்று கன மழை பெய்தது. இரவு பெய்த தொடர்மழை காரணமாக நான்கு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
வடக்கு தக்கார் மாகாணத்தின் பெரும்பாலான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் மழையால் நீர்வரத்து அதிகரித்ததால் அணை உடைந்து அருகில் உள்ள மலைக் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
ஆக்ரோஷத்துடன் சீறிப் பாய்ந்த வெள்ள நீரில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நடு இரவில் வெள்ளம் சூழ்ந்ததால், பெரும்பாலான மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை.
12க்கும் அதிகமான வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் வெள்ள நீர் இழுத்துச் சென்றதில் 28 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இது ஆப்கனில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இயற்கைப் பேரழிவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளம் சூழ்ந்த கிராமங்கள் நாட்டின் பிற பகுதிகளிடமிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால் இக்கிராமங்களுக்கு விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே செல்ல முடியும் சூழல் உருவாகியுள்ளது. வாகனம் செல்ல முடியாத காரணத்தால் 6 மணி நேரத்துக்கு பின்புதான் அப்பகுதிக்கு மீட்பு படையினர் செல்ல முடிந்தது.
இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் 26 பேர் உயிரிழந்தனர். அப்போது 100க்கும் அதிகமானோரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இப்போது புதிதாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 28 பேர் உயிரிழந்ததோடு, 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது ஆப்கன் மக்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply