மட்டக்களப்பில் ரணில் கலந்து கொண்ட நிகழ்வில் வெடிகுண்டு

மட்டக்களப்பு நகரில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக் கிழமை மாலை கலந்து கொள்ளும் நிகழ்வோன்று ஏற்பாடு செய்யப்பட்ட கட்டிடத் தொகுதியில் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சி கூறுகின்றது.

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்க தனது கட்சி பிரதிநிதிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் தனித் தனியாக சந்தித்து மாவட்டத்தின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

மாலையில் மட்டக்களப்பு நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் மற்றுமொரு சந்திப்பொன்றில் அவர் கலந்து கொள்ளவிருந்ததாகவும் இ அவ்விடுதியின் கட்டிடத் தொகுதயிலேயே குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் பாதுகாப்பு உத்தியோகத்தினர்களினால் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டு சிறப்பு அதிரடிப் படையினருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் பின்னனி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தயா கமகே தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை முடித்துக் கொண்ட ரனில் விக்கிரமசிங்க கொழும்பு திரும்பினார்.

குண்டு கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply