விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளருக்கு 5 வருடங்களின் பின் விடுதலை
அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 5 வருடங்களாக சிறைத் தண்டணை பெற்று வந்த நபரை அமெரிக்க நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
55 வயதான கருணாகரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஏவுகணைக், துப்பாக்கிகள், தொழிநுட்ப இயந்திரங்கள் மற்றும் பல மில்லியன் ரூபா பணமும் வழங்கியதாக 2009ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இவருக்கு கடூழிய தண்டணையாக 20 ஆண்டுகள் விதிக்க வெண்டும் என சட்டத்தரணி வாதாடினார்.
எனினும் இவர் தனது சமூகத்தின் நன்மைக்காக செயற்பட்டவர் எனக் கூறி சிறையில் இருந்த காலங்களை தண்டணைக் காலமாக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இதன் பின்னதாக 5 வருட சிறைத்தண்டணை பெற்றுள்ள நிலையில் அவரை விடுதலை செய்வதாக அமெரிக்க நீதிமன்றம் தீர்மானித்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான அமைப்புக்கள் 12 நாடுகளில் இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இயங்கிய அமைப்பின் பிரதானியாக கருணாகரன் கந்தசாமி செயற்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply