ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஈமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வசந்தா என்ற அந்த பெண், தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
கணவனுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து வசந்தா, முதலமைச்சரின் போயஸ்கார்டன் அலுவலகத்திற்கு தனது கணவர் நாச்சிமுத்து பெயரில் ஈ.மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதேபோன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் வசந்தா தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply