ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் இலங்கையில் கடற்படை மத்திய நிலையம்!
சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளக் கூடிய கடலோட்ட பயிற்சி முகாம் ஒன்றை துரிதமாக இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கப்பல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர், கப்பல்துறைக்கு தேவையான அனைத்து பிரிவுகளிலும் தொடர்புடைய தரப்பினர் உள்ளடக்கப்படுவர்.
பயிற்சி நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்வதற்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளக் கூடிய கடலோட்ட பயிற்சி மத்திய நிலையத்தின் ஊடாக பாரிய அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.’
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply