இலங்கையில் இந்திய தொழிலாளர்கள் அடிமைகளாக உள்ளனர்!
இலங்கையில் செயற்படும் இந்திய முதலீட்டு செயற்றிட்டங்களில் இந்தியர்கள் அடிமைகளைப் போன்று சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டினை தமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இந்திய முதலீட்டாளர் ஒருவரினால் கம்பஹா மாவட்டத்தில் முத்தரகம பிரதேசத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் இந்திய ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானதை அடுத்தே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த குமார் மல்லிக் என்ற 29 வயதான இரும்பு பொருத்துனர் கடந்த செவ்வாய்க்கிழமை இ;வ்வாறு தொழிற்சாலை விபத்தில் பலியானார்.
இவர் கடந்த டிசம்பர் மாதமளவிலேயேஇ இலங்கை வந்துள்ளார். 153 பேரைக் கொண்ட குறித்த தொழிற்சாலையில் 101 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply