தாயுடன் விறகு பெறச் சென்ற சிறுவன் வெடிச்சம்பவத்தில் காயம் – சாவச்சேரியில் சம்பவம்
சாவகச்சேரியில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடிச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
குறித்த சிறுவன் தாயுடன் விறகு வெட்ட சென்ற வேளையிலேயே இந்த வெடிச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெடிச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply