நிறைவடைந்த தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை! மீண்டும் ஒரு தேர்தலை தடுக்க நடவடிக்கை
கிரேக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் வெற்றி கிடைக்காத நிலையில், மீண்டும் புதிய தேர்தல் ஒன்றை தவிர்க்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய அவசர கால இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் நோக்கில் கிரேக்க ஜனாதிபதி கார்லோ பப்போலியோஸ் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்றவகையில், கிரேக்கத்தில் உள்ள முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரையும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னர், கிரேக்கத்தின் முக்கிய மூன்று கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கூட்டணி அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பான முயற்சிகள் தோல்வி கண்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply