அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தி ஒரு வருட பூர்த்தியை கொண்டாடிய மக்கள்

ஸ்பெய்ன் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்பாட்டங்கள் இடம்பெற்று ஓராண்டு பூர்த்தியை அந்தநாட்டு மக்கள் அனுஷ்டித்துள்ளனர்.

மத்திய மெட்ரிட் பகுதியிலுள்ள சதுக்கத்தை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பல தசாப்த காலத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்பாட்டம் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டது.

ஸ்பெய்னின் வேலைவாய்ப்பின்னை வீதம் கடந்த ஏப்ரல் மாதம் உயர்ந்த பெறுமானத்தை பதிவு செய்ததுடன், செலவீனக் குறைப்பு தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது.

குறித்த பகுதியில் இருந்து கலைந்து செல்லுமாறு ஸ்பெய்ன் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்த போதிலும், மக்கள் குறித்த பகுதியில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply