ஜீ.எல்.பீரிஸ் இன்று அமெரிக்கா செல்கிறார்

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அமெரிக்கா செல்லவுள்ளார்.

நான்கு நாட்கள் இவர் அமெரிக்காவில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பை ஏற்று ஜீ.எல்.பீரிஸ் அங்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜீ.எல்.பீரிஸ் தனது இந்த விஜயத்தில் அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலாரி கிளின்டனை சந்தித்து இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

மேலும் அமெரிக்க காங்கிரஸ் கட்சி மற்றும் செனட் சபை உறுப்பினர்களையும் ஜீ.எல்.பீரிஸ் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply