கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலினை கட்டுப்படுத்துவதற்கு ஹெலிகொப்டர் திட்டம்

கொழும்பு நகரில் காணப்படுகின்ற போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு ஹெலிகொப்டரைப் பயன்படுத்தும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டரைப் பயன்படுத்துவது தொ டர்பில் விஷேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் விஜயகுணவர்த்தன தெவித்தார்.

அபிவிருத்தியடைந்த சில நாடுகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு ஹெலிகொப்டர் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இது போன்ற நடவடிக்கையினை இலங்கையிலும் அறிகப்படுத்தலாம் எனவும் அவர் தெவித்தார்.

ஹெலிகொப்டர் மூலம் இவ்வாறான நட வடிக்கையினை மேற்கொள்வது செலவு கூடிய ஒரு விடயமாக இருக்கின்ற போதிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்ற இடத்தினை விரைவாக அடையாளம் கண்டுகொள்வதற்கும் அதனை சீர்செய்வதற்கும் இந்த முறைமை உகந்ததாக அமையும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply