இராமேஸ்வரம் மீனவர்கள் முற்றுகைப் போராட்டம்
இராமேஸ்வரத்தில் சிறை பிடிக்கப்பட்ட உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி மீன்துறை அலுவலகம் முன்பு இன்று காலை முற்றுகை போராட்டம் நடந்தது.
கடந்த 21-ந்திகதி கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை 5 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மீனவர்களை விடுவிக்கக் கோரி கடந்த 22-ந்திகதி முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ஆனால் இன்று வரை மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை சிறைபிடிக்கப்பட்டு உள்ள 23 மீனவர்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மேலரத வீதியில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மீனவர்களிடம் மீன்துறை அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
எனினும் அவர்கள் மீனவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபடுபட்ட மீனவர்கள் கூறும்போது, கடந்த 21-ந்திகதி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையினரின் அத்து மீறலை தடுத்து நிறுத்த வேண்டும். கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும் என்று கூறினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply