சீனாவில் மனித உரிமை நிலைமைகள் மோசம்
சீனாவில் மோசமடைந்துள்ள மனித உரிமை நிலைமைகள் குறித்து அந்த நாட்டின் மீது அமெரிக்கா அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளது.
மனித உரிமைகள் தொடர்பாக சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வருடாந்த சந்திப்பு வொஷிங்டனில் நடைபெற்றது.
மனித உரிமைகள் தொடர்பாக பெய்ஜிங் தவறான பாதையில் செல்வதை அவதானிப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் கூறியுள்ளார்.
அரச கொள்கை எதிர்ப்பாளர்களுக்கு இடமளிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் தமது நாட்டிலும் உள்ளதாக சுட்டிக்காட்டிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலாளர், அதனை எதிர்கொள்ள கடுமையான கட்டமைப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சீனாவின் மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்கா விமர்சிக்கின்றமை குறித்து சீனா தொடர்ந்தும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply