சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் கைது
கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட மேலும் 6 பேர் சல்லிசாம்பல் தீவு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னர் கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 2 பேர் கடந்த 24ம் திகதி கைது செய்யப்பட்டனர்
இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையிலே குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply