சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 47 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்க தயாரான 47 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்தார்.

மோதறை கடற் பிரதேசத்தில் வைத்து 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோதறை பிரதேசத்தில் கைது செய்யப்ட்டவர்கள் இன்றைய தினம் மோதரைப் பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply