ஆயுத விற்பனை! அனைத்து நாடுகளும் பொதுவான உடன்படிக்கையின் கீழ் செயற்பட வேண்டும்

ஆயுத விற்பனை தொடர்பில் அனைத்து நாடுகளும் பொதுவானதொரு உடன்படிக்கையின் கீழ் செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சர்வதேச பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு வருடத்துக்கு 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் 70 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான பெறுமதிக்கு ஆயுத விற்பனை இடம்பெறுகின்றது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஆயுத ஏற்றுமதியில் முன்னணி வகிக்கின்றன.

சர்வதேச ரீதியில் ஆயுத விற்பனை அதிகரித்துள்ளமை பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply