ஒரு வருட காலத்தில் மட்டும் 2.8 லட்சம் அமெரிக்கர்களுக்கு இந்திய நிறுவனங்களில் வேலை

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் கடந்த ஆண்டில் மட்டும் 2.8 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைத்ததாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆசிய அமைப்பின் கூட்டத்தில் அவர் பேசியதாவது: அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன.

நிறுவனங்களை வாங்கியது மற்றும் பெரிய திட்டங்களில் கடந்த ஆண்டில் அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் 500 கோடி டாலர் (ஒரு டாலர் ரூ.55) அன்னிய நேரடி முதலீடு செய்தன.

அதன்மூலம், 2.8 லட்சம் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பு பெற இந்திய நிறுவனங்கள் உதவியுள்ளன. இவ்வாறு நிருபமா ராவ் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply