நல்லூரில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக 750 பொலிஸார் கடமையில்

யாழ். நல்லூர் உற்சவகாலப் பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதினால் அப்பகுதியில் கடமையில் ஈடுபடும் பொலிஸாரின் எண்ணிக்கை மேலதிகமாக 150 பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு கூறினார்.

யாழ். நல்லூர் பகுதியில் ஏற்கனவே 600 பொலிஸார் கடமையில் ஈடுபடத்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மேலதிகமான 150 பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply