மன்னார் நிலைமைகளை ஹக்கீம் நேரில் சென்று அவதானிப்பு
இலங்கையில் நீதிபதிக்கும், நீதிமன்றத்திற்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளை, நீதி அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் நேற்று மன்னாருக்கு விஜயம் செய்துள்ளார்.
மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் அந்தப்பகுதி மீனவ மக்களையும், ஏனையோரையும் அவர் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
இந்தச் சந்திப்பின்போது கலகத்தில் ஈடுபடடவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 பேரையும் விடுதலை செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீதித்துறையின் சுயாதீனமும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதனால், நீதிஅமைச்சர் என்ற வகையிலும் அமைச்சர் என்ற ரீதியில் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அரசியல்வாதி என்ற வகையிலும் கோந்தைப்பிட்டி கடலுரிமை தொடர்பான பிரச்சினையையும் அதனோடு தொடர்புபட்ட விடயங்களையும் மிகவும் அவதானமாகக் கையாள வேண்டியிருப்பதாக மக்களுக்கு எடுத்துரைத்ததாக அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் கூறினார்.
சர்ச்சைக்குரிய கோந்தைப்பிட்டி மீன்பிடி துறைக்கும் சென்று அமைச்சர் பார்வையிட்டுள்ளார். எனினும், நீதிமன்றத்தரப்பினரையோ, அரச அதிகாரிகளையோ தான் சந்திக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply