இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்காவிட்டால் மீண்டும் இன மோதல் வெடிக்கும்!
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்காவிட்டால் மீண்டும் இன மோதல் புதிய வடிவத்தில் உருவெடுக்கும் என்று நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நோர்வேயின் ஆஃப்டன் போஸ்டன் செய்திதாளுக்கு அவர் அளித்த நேர்காணலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் 30 வருட கால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் பிரச்னையே பிரதான காரணம்.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அந்த பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதனை இன்றும் அரசாங்கம் செய்யாதுள்ளது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் மீண்டும் இன மோதல் புதிய வடிவங்களில் உருவெடுக்கும் என்றும்; எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply