புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தம் திட்டத்தில் மாற்றமில்லை

புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தம் திட்டத்தில் மாற்றமில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

தயான் அந்தனி என்னும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரை நாடு கடத்தியதன் மூலம் புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளது.

படகுப் பயணிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கொள்கை மாற்றங்கள் எதனையும் செய்யவில்லை என அந்நாட்டு குடிவரவு திணைக்கள அதிகாரி டெனியல் சான்ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கை விண்ணப்பம் உரிய தகுதிகளைக் கொண்டிருக்காத காரணத்தினாலேயே தயான் அந்தனி நாடு கடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உரிய தகுதிகளைக் கொண்ட எந்தவொரு புகலிடக் கோரிக்கையாளரும் நாடு கடத்தப்படவில்லை எனவும், தகுதியற்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் மட்டுமே நாடு கடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply