ஐநாவின் சிறுவர் பாதுகாப்பு உறுதிப்பாட்டில் இலங்கை கைச்சாத்து

உலகம் முழுவதிலும் உள்ள சிறார்களுக்கு பாதுகாப்பை வழங்கும் முகமாக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் புதிய உறுதிப்பாட்டில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் பேரவைக் கூட்டத்தில் இந்த உறுதிப்பாடு முதல் தடவையாக நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது. எனினும், கடந்த சில வருடங்களுள் இந்த உறுதிப்பாடு செயற்பாட்டில் இருக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் ‘எமது பிள்ளைகளை பாதுகாப்பதற்கான  உறுதிமொழியை புதுப்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் இந்த புதிய உறுதிப்பாட்டை மீண்டும் செயற்படுத்துவதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உறுதிப்பாட்டை ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ரீசா ஹுசையினி கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளார்.

உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சிறார்களின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருப்பதாக இந்த சந்திப்பின் போது ரீசா ஹுசையினி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply