இலங்கை விவகாரங்களில் மூக்கை நுழைப்பதை இந்தியா நிறுத்த வேண்டும்!

இலங்கை மீது பிரயோகிக்கும் அழுத்தங்களை இந்தியா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட முன்னணியின் அரசியற்குழு உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மட்டத்தில் அழுத்தங்களை பிரயோகித்து நாட்டை பிளவுபடுத்துவதற்கான தேவை சிலருக்கு உள்ள போதிலும் இலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அந்தத் தேவை இல்லை என அவர் கூறினார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் தென் இந்தியாவின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு இந்திய அரசு தலையீடு செய்ய வேண்டும் எனவும் பியசிறி விஜேநாயக்க குறிப்பிட்டார்.

அதற்கெதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் செயற்பாடுகள் அவ்வாறே அமையுமாயின் சீனாவுடன் அதிக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.

சார்க் நாடொன்றுக்கு எதிராக பிரயோகிக்கப்படும் இத்தகைய அழுத்தங்களை இந்திய மத்திய அரசு தலையீடு செய்து உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் அரசியற் குழு உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply