இந்திய மீனவர்கள் 13 பேர் கடற்படையால் கைது
இராமேஸ்வரம் – மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க நேற்று காலை கடலுக்குச் சென்ற மீனவர்கள் 13 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப் பட்டதாக தப்பி வந்த மற்ற மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
நேற்று காலை கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
கட்டைகள், போத்தல்களை வீசி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டி விட்டதாகவும், மீனவர்களில் 13 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை பிடித்துச் சென்றுவிட்டதாகவும் தப்பி வந்த மீனவர்கள் கூறினர்.
மேலும் இந்தத் தாக்குதலில் ஞானசேகரன் என்ற மீனவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து மண்டபம் பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply