டெசோ தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை அரசு அலட்டிக் கொள்ளாது!
தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகளோ அல்லது டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ இலங்கை அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை என ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இலங்கை அரசும் இந்திய மத்தியரசும் மிக நெருங்கிய உறவுகளையே வைத்திருக்கின்றது. எனவே தமிழக எதிர்ப்புகள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
அத்துடன் டெசோவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஐ.நா. விற்கு கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து இலங்கை அரசு அலட்டிக் கொள்ளாது. ஏனெனில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் காணப்படக் கூடிய அனைத்து சவால்களையும் இலங்கை எதிர்கொள்வதற்கு தயாராகவே உள்ளது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், இலங்கை அரசாங்கத்தை பொறுத்த வரையில் வேறொரு நாட்டின் பிராந்திய அரசுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் இறையாண்மைக்கோ அல்லது சுயாதீன தன்மைக்கோ களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தியா நடந்து கொள்ளாது என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளது.
எனினும் நாட்டில் ஏற்பட்டிருந்த முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டுடன் முடிவடைந்ததன் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் வடக்கு கிழக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை அனைத்து தரப்புக்களும் பார்வையிட முடியும்.
நாட்டின் நல்லிணக்கத்திற்காக அரசு முன்னெடுக்கும் பல்வேறு வகையான நடவடிக்கைகளும் மிகவும் வெளிப்படையாகவே இடம் பெற்றுவருகின்றது. எனவே எவ்விதத்திலும் இலங்கையை எவராலும் குறை கூற முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply