லலித், குகனை விடுதலை செய்ய கோரி கையொப்ப திரட்டல்
லலித்குமார் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யுமாறு முன்னிலை சோசலிஸக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
குறித்த இருவரும் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் போனதாக முறையிடப்பட்டிருந்தது. எனினும் இதுவரை அவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்தநிலையில் லலித் மற்றும் குகனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முன்னிலை சோசலிஸக்கட்சி, இன்று இணையத்தள கையொப்ப திரட்டலை கொழும்பில் ஆரம்பித்தது.
இதன்போது கருத்துரைத்த கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜெயகொட தமது உறுப்பினர்கள் இருவரும் காணாமல் போனமை ஜனநாயக விரோத செயல் என்று குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply