அவுஸ்திரேலிய மயக்கம்! இலங்கை அகதிகளை தெளிவுபடுத்த தீர்மானம்

இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்கள், தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவ்வப்போது முகாம்களில் இருந்து தப்பி அகதிகள் அவுஸ்திரேலியா செல்ல முயற்சிக்கின்றனர். இவ்வாறு ஆபத்தான கடல் வழியில் அவுஸ்திரேலியா செல்ல வேண்டாம் என்றும், அது பாதுகாப்பானது அல்ல என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும், அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்லும் தமிழர்களுக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்து தமிழகத்தில் உள்ள 111 முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற தமிழகர்கள் சுமார் 600 பேர் வரை கடலிலேயே உயிரிழந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயன்ற 100 அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply