கிழக்கில் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு
கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஏறாவூர் ஏ.கே. வீதியில் உள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரிஸின் ஆதரவாளர் ஒருவரது நகையகம் இன்று அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளது.
இதேவேளை திருகோணமலை பகுதியில் துளசிபுறம் பகுதியிலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரது வாகனம் நேற்றிரவு எரியூட்டப்பட்டதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கேகாலை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் அரச வாகனங்களை தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்துவது தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் இவ்வாறு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி முழுமையாக சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply