நவநீதம்பிள்ளை பணிப்பு! தொழில்நுட்ப அதிகாரிகள் இலங்கை வருகின்றனர்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பணிப்புரைக்கமையவே மனித உரிமைகள் சபையைச் சேர்ந்த தொழில்நுட்ப அதிகாரிகள் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் வெளியிட்டுள்ளார்.
பின்னர் இலங்கை வரவுள்ள நவநீதம்பிள்ளையின் விஜயம் குறித்த ஏற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கொள்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது நாட்டிகன் எந்த பகுதிக்கும் செல்வதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் அதற்குரிய சகல வளங்களும் பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply