பூந்தமல்லி சிறப்பு முகாமில் இங்கை தமிழ் அகதியின் உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது

தமிழகத்துக்கு உரிய ஆவணங்கள் இன்றி கடல் வழியாக வந்த இலங்கை அகதிகளை பொலிசார் கைது செய்து பூந்தமல்லி, செங்கல்பட்டு உள்ளிட்ட சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அகதிகள் முகாமில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில் இருக்கும் செந்தூரன் என்ற அகதி கடந்த 6-ந் திகதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

நேற்று பூந்தமல்லி தாசில்தார் வளர்மதி, அகதி செந்தூரனை நேரில் சந்தித்தார். அப்போது அவரிடம், “உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும்படி´´ கூறினார். இதற்காக வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் செந்தூரன் வைத்தியசாலைக்கு செல்ல மறுத்து விட்டார்.

பின்னர் மாலையில் செந்தூரனிடம் பேச்சுவார்த்தை நடத்த திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ரவிக்குமார் சிறப்பு முகாமிற்கு வந்தார். அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்தார். ஆனால் அதற்கும் செந்தூரன் மறுத்து விட்டதால், ஆர்.டி.ஓ. திரும்பி சென்று விட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply