வாக்காளர்கள் ஆட்சேபனை தெரிவிப்பதற்கு கால அவகாசம்

2012ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவேட்டில் பதிதாக பெயர் உள்ளடக்கப்பட வேண்டியவர்களுக்கான உரிமைக் கோரிக்கை மற்றும் பெயர் நீக்கப்பட வேண்டியவர்கள் குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கும் தேர்தல்கள் செயலகம் கால அவகாசம் வழங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் சேகரிக்கப்பட்ட பெயர் விபரங்களின் அடிப்படையில் புதிய வாக்காளர் பதிவேடுகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் வாக்காளர் பதிவேட்டில்  புதிதாக உள்ளடக்கப்பட வேண்டியவர்களின் பெயர்களுக்கான உரிமைக் கோரிக்கை்கான படிவத்தையும் பெயர் நீக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில் ஆட்சேபனைத் தெரிவிப்பதற்கான படிவத்தையும் அனைத்து கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் பெற்றுகொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.

பதிய வாக்காளர் பதிவேட்டு விபரங்களுடன் நடைமுறையிலுள்ள 2011ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேடும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply