போராட்டத்தை கைவிடத் தயார் – விரிவுரையாளர்கள்
இன்றைய சந்திப்பின் போது, தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் பட்சத்தில், தமது தொழிற்சங்க போராட்டத்தை நிறைவு செய்துக் கொள்வதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் டெரன்ஸ் மடுஜித் இதனைத் தெரிவித்துள்ளார். இன்று மாலை பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாதுள்ளமை தொடர்பில், தமிழகத்தில் உள்ள கல்வி மான்கள் கண்டனம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் கல்விமான்கள், பொருளாதார அறிஞர்கள் ஒன்றிணைந்து இது தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் கல்வித்துறை முகம் கொடுத்துள்ள சிக்கலான சூழ்நிலை தொடர்பில் தங்களின் அவதானம் சென்றுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த சிக்கல்களுக்கு சிறந்த தீர்வு ஒன்று விரைவில் காணப்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply