இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடித் தீர்வு வழங்க வேண்டும்ு
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடித் தீர்வு வழங்க வேண்டுமென முன்னாள் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
´ஸ்டில் கவுன்டிங் தி டெட்´ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தமிழ் மக்களை அணுக வேண்டுமாயின் நான்கு முக்கிய காரணிகளுக்கு தீர்வு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல், சட்டவிரோத கடத்தல்கள் நிறுத்ததுதல் மற்றும் வடக்கின் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் என்பவற்றிற்குகான தீர்வினை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கு கிழக்கு பிரதேசங்கள் சிங்கள மயமாக்கலுக்கு உட்படாது என்பதற்கு இலங்கை அரசு உத்தியோகபூர்வ வாக்குறுதியளிக்க வேண்டும் எனவும் எரிக் சொல்ஹெய்ம் இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply