நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீது தாக்குதல்
நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண இனந் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இன்று காலை தாக்குதலுக்கு உள்ளான அவர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண மீதான தாக்குதலை அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
இதேவேளை இந்த தாக்குதல் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply