இலங்கை அகதிகள் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பபை ஆஸி அரசு நடைமுறைப்படுத்தவில்லை

இலங்கை அகதிகள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அவுஸ்ரேலிய அரசாங்கம் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய சட்டத்தரணிகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இலங்கையர் அகதி ஒருவர் தொடர்பில் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையில், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று கருத்தி, தஞ்ச கோரிக்கையை மறுக்க முடியாது என்று அவுஸ்ரேலிய உயர் நீதிமன்றம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது.

அத்துடன் அகதிகளை தடுத்து வைக்க முடியாது எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில், இந்த தீர்ப்பின் படி பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று தெரிவிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 யிற்கும் மேற்பட்ட அகதிகளை அவுஸ்ரேலிய அரசாங்கம் விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் அந்த நடவடிக்கை இதுவரையில் மேற்கொள்ளப்படாததை சுட்டிக்காட்டியுள்ள அவுஸ்ரேலிய சட்டத்தரணிகள், நீதிமன்ற தீர்ப்பை உடன் நடைமுறைப்படுத்தும் படியும் கோரியுள்ளனர்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் நிக்கலோ ரிக்சன், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கவனமாக பரிசிலிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply