நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்டதன் பின்னணியில் தேசிய, சர்வதேச சூழ்ச்சியாளர்கள்

நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தாக்கப்பட்டதன் பின்னணியில், செயற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சியாளர்கள் இருப்பதாக உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலக்கரட்ன மீதான தாக்குதல் குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் நீதித்துறையில் தலையிட வேண்டாம் எனக் கூறி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையிலான ஜனாதிபதி, அரசாங்கம் என நாம் அனைவரும் அதிருப்தியடைந்தோம். நீதித்துறையில் தலையிட தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

தான் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும் உயர்வையும் கௌரவத்தையும் பாதுகாப்பதாக ஜனாதிபதி கூறினார்.  நீதித்துறையுடன் எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தி கொள்ள தயாரில்லை என அவர் குறிப்பிட்டார். இதனால் அரசாங்கத்திற்கு பெரும் பிரச்சினை ஏற்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு எதனையும் செய்து கொள்ள முடியாது, அவர்கள் மௌனமாகினர்.

இந்த நிலையில், ஆணைக்குழுவின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தி அதனை அரசாங்கத்தின் பக்கம் திசைத்திருப்ப பார்த்துள்ளனர்.  மஞ்சுள திலக்கரட்ன மீது தாக்குதல் நடத்திய செயற்பட்டுள்ள சூழ்ச்சியை பாரதூரமான செயற்பாடாக அரசாங்கம் கண்கிறது.

விரிவுரையாளர்களின் பின்னணியில் அரசசார்பற்ற நிறுவனங்கள் இருந்தன.  உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வரும் சந்தர்ப்பத்தில் முழு உலகத்தின் கண்களும் இலங்கை மீதே இருந்தன.  ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.  அதில் இலங்கைக்கு எதிராக யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இலங்கையின் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் திட்டமிட்ட தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் இருக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த தாக்குதலை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி சூழ்ச்சியாளர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply