விரிவுரையாளர்களிற்கு புதிய வேதன முறைமை தயாரிக்க நிதி அமைச்சு இணக்கம்
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதன பிரச்சனைக்கு தீர்வாக புதிய வேதன முறைமை ஒன்றை தயாரிக்க நிதி அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை பல்கலைக் கழக விரிவுரையாளர்களின் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் டெரன்ஸ் மடுஜித் வெளியிட்டுள்ளார். நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர இந்த இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த புதிய வேதன முறைமை தொடர்பாக நிதி அமைச்சின் செயலாளருடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது, அறிவிக்கவுள்ளதாக டெரன்ஸ் மடுஜித் குறிப்பிட்டுள்ளார்.
வேதனம் தொடர்பான முறைமை குறித்து நாளை, சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவிடம் அறிவித்து, தொழில் சங்க போராட்டத்தை கைவிடுவது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும் என பல்கலைக்கழக சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் டெரன்ஸ் மடுஜித் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply