1998ம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் கண்டு பிடிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டு லயன் எயார் பயணிகள் விமானமொன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியிருந்தனர். இந்தப் பயணிகள் விமானத்தில் பயணம் செய்த 48 பயணிகளும், விமானி உள்ளிட்ட ஏழு விமான சிற்பந்திகளும் உயிரிழந்தனர்.
கடலில் வீழ்ந்த இந்த விமானத்தை மீட்கும் பணிகளை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த விமானத்தை கண்டு பிடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விமானத்திப் பாகங்களை மீட்கும் பணிகளை கடற்படையினர் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.
இரணை தீவு கடற்பகுதியில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. சுழியோடிகள் குறித்த பிரதேசத்தில் தற்போது ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் விமானத்தின் பாகங்களை மீட்க முடியும் என கடற்படையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவரான கடாபி என்பவரே இந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கடாபி உயிரிழந்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply