அரசு நாட்டின் சட்டங்களை மீறி நடக்கிறது
இந்த நாட்டின் நிதிப் பிரமாணங்களையும் சட்டங்களையும் மீறி, இந்த அரசாங்கம் பொதுமக்களின் பணத்தை தமது பணம்போல செலவளிக்கின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரம் பொருளியலாளருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கிரேக்க பொருளாதாரம் முறிவடைந்து போயிருந்ததை நன்கு அறிந்திருந்தும் இந்த அரசாங்கம் 330 மில்லியன் ரூபா கிரேக்க பிணைகளில் முதலீ செய்தது. இந்த கவனயீனமதன முதலீட்டால் நாடு 200 மில்லியன் ரூபாவை இழந்தது என அவர் குறிப்பிட்டார்.
பங்குச் சந்தையை ஆட்டிப்படைத்த சிலரே இந்த ஊழலின் பின்னும் உள்ளனர். இதுபற்றி நாடாளுமன்றத்தில் கேட்டால் இப்பிரச்சினை உயர்நிதிமன்றத்தில் உள்ளதென கூறி பதிலளிப்பதை தவிர்த்துவிடுகின்றனர் என அவர் கூறினார்.
சாதாரண மனிதர் ஒரவர் சிறு குற்றமிழைத்தாலும் தண்டிக்கப்படுகின்றனர். ஆனால், பல மில்லியன் ரூபா ஊழல் நடக்கும் பொது குற்றவாளிகள் தண்டனை ஏதுமின்றி தப்பிவிடுகின்றனர். இது வெளியிலும் தெரிவதில்லை.
நாம் இவ்வாறு நிதி மோசடிகளை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தும் போது எமது குரல்கள் நசுக்கப்படுகின்றன. கிரேக்க ஊழலை அம்பலப்படுத்தவே தான் இந்த செய்தியாளர் மாநாட்டை நடத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply