35 சர்வதேச அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கு இலங்கை பற்றி விளக்கம்
ஜெனீவாவில் நடைபெற இருக்கின்ற சர்வதேச காலக்கிரம மீளாய்வு அறிக்கைக்கு முன்னதாக இலங்கையின் அமைச்சர் மகிந்த சமரசிங்க சந்திப்புக்களை நடத்தி வருகிறார். இதன் ஒரு கட்டமாக அவர் சுமார் 35 சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் குடியியல் மற்றும் சமூக பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.
இதன்போது, போருக்குப் பின் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றமான நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், ஜெனீவாவில் ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் நவம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறும் சர்வதேச காலக்கிரம மீளாய்வு அமர்வு நடைபெறவுள்ளது.
இலங்கை தொடர்பான மீளாய்வு நொவம்பர் 1ஆம் திகதி முதல் 5ஆம் திகதிவரை இடம்பெற்று, 5ஆம் திகதியன்றே நிறைவேற்றப்படவுள்ளது.
இதன் போது, இலங்கை தொடர்பில் மீளாய்வை மேற்கொண்ட இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகள் தமது அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளன.
அந்த நாடுகளின் அறிக்கை நவம்பர் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு அன்றைய தினமே நிறைவேற்றப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply