விஸா விண்ணப்பங்கள் தொடர்பில் நோர்வே தூதரகம் எச்சரிக்கை
விஸா விண்ணப்பங்கள் தொடர்பில் உதவி வழங்குவதாகக் கூறி பணம் வசூலிக்கும் முகவர்கள் தொடர்பில் எச்சரிக்கையான இருக்குமாறு கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. நோர்வேயில் வேலை வாய்ப்பு பெறுவது தொடர்பில் இந்த முகவர்களில் பலர் தவறான தகவல்களை வழங்கி வருகின்றனர் என்று தூதரகத்தின் பிரதி தலைவர் கூறினார்.
ஏற்கனவே, கிடைத்துள்ள ஏராளமான விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டியுள்ளதால் தற்போதைக்கு வேலை அனுமதி விண்ணப்பப் பத்திரங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக நோர்வே தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply